Latestமலேசியா

ஊழல் குற்றவாளிகளுக்கு எதிராக போலீஸ் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் ; பிரதமர் வலியுறுத்தல்

கோலாலம்பூர், ஜூன் 14 – முறைகேடு அல்லது ஊழலுக்கு எதிராக சட்ட விதிமுறைகளின் படி, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், நாடு பாதுகாப்பாக இருக்காது என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.

அதனால், ஊழல் குற்றவாளிகளின் அந்தஸ்தை பொருட்படுத்தாமல், நீதியை நிலைநாட்ட, உண்மையான ஆதாரங்கள் அடிப்படையில், அரச மலேசிய போலீஸ் படை உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பிரதமர் கேட்டுக் கொண்டார்.

குற்றவியல் அல்லது ஊழல் வழக்கு விசாரணைகள், நீண்ட காலம் எடுக்கும் போது, மக்கள் பலர் அதிருப்தி அடைகின்றனர்.

எனினும், எந்த ஒரு தரப்பினரையும் தற்காக்காமல், விசாரணை நியாயமாக நடைபெறுவதை உறுதிச் செய்ய அந்நடவடிக்கை அவசியம் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

குற்றவாளிகள் அல்லது ஊழல்வாதிகளை பாதுகாக்க தாம் பிரதமராகவில்லை என குறிப்பிட்ட டத்தோ ஸ்ரீ அன்வார், அதனால், சட்ட விதிமுறைகள் அடிப்படையில், யாருக்கும் பாராபட்சம் இல்லாமல், நியாயமான மற்றும் வெளிப்படையான முறையில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமென வலியுறுத்தினார்.

தலைநகர், புக்கிட் ஜாலில் அரங்கில், 2023 தேசிய விளையாட்டு விருது விழாவில், பிரதமர் உரையாற்றினார்.

இளைஞர் விளையாட்டு அமைச்சர் ஹன்னா யோவ் (Hannah Yeoh), துணையமைச்சர் ஆடம் அட்லி அப்துல் ஹலீம் (Adam Adli Abd Halim) ஆகியோரும் அந்த விருது விழாவில் கலந்து கொண்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!