Latestமலேசியா

எனக்கு விரைவில் திருமணமா? பஹாங் பட்டத்து இளவரசர் மறுப்பு

கோலாலம்பூர், ஜூலை-12, தமக்கு விரைவிலேயே திருமணம் நடக்கப் போவதாகக் கூறப்படுவதை பஹாங் பட்டத்து இளவரசர் தெங்கு ஹாசானால் இப்ராஹிம் அல் சுல்தான் அப்துல்லா ( Tengku Hassanal Ibrahim Al-Sultan Abdullah) மறுத்துள்ளார்.

மாநில சுல்தானின் புதல்வர் என்ற வகையில் மக்கள் என் தனிப்பட்ட வாழ்க்கை மேல் காட்டும் அக்கறை என்னை நெகிழ வைக்கிறது.

அதே சமயம் திருமணம் என்பது என் தனிப்பட்ட விஷயம்; அது தொடர்பான எனது நிலைபாட்டை அனைவரும் மதிப்பார்கள் என நான் நம்புகிறேன் என 29 வயதாகும் தெங்கு ஹாசானால் தனது Instagram story-யில் குறிப்பிட்டார்.

திருமண பந்தத்தில் நுழையும் முடிவு, நன்கு ஆராய்ந்து, சரியான நேரத்தில் எடுக்கப்பட வேண்டிய ஒன்று என தாம் நம்புவதாக அவர் தெரிவித்தார்.

தற்போதைக்கு பட்டத்து இளவரசர் என்ற முறையில் மாநில மக்களுக்கு சேவையாற்றுவதில் தான் என் முழு கவனமும் இருக்கிறது.

அதை முழு பொறுப்புணர்வோடும் கடமைத்தவறாமலும் செய்து முடிப்பதே தமது இலக்கு என்றார் அவர்.

“திருமணம் இல்லை. என்னைத் தொந்தரவு செய்யாதீர்கள்” என்ற வாசகத்தோடு தெங்கு ஹாசானால் பதிவேற்றியுள்ள Instagram story வைரலாகியுள்ளது.

தமது தந்தையார் அல் சுல்தான் அப்துல்லா நாட்டின் 16-வது மாமன்னராக இருந்த காலக்கட்டத்தில் தெங்கு ஹாசானாலும் அவரின் இளைய சகோதரர்களும் நெட்டிசன்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக வலம் வந்தது குறிப்பிடத்தக்கது.

மக்களிடத்தில் எளிமையாகப் பழகுவதோடு பண்பானவராகவும் அறியப்படும் தெங்கு ஹாசானால், இன்னும் திருமணம் செய்துக் கொள்ளாமல் இருப்பது குறித்து நெட்டிசன்கள் பலர் குறிப்பாக பெண்கள் நீண்ட காலமாகவே ‘கவலைத்’ தெரிவித்து வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!