Latestமலேசியா

எரிமலைக் கக்கும் புகையால் விமானங்களுக்கும் பாதிப்பு; எச்சரிக்கும் ஆராய்ச்சியாளர்கள்

கோத்தா கினாபாலு, ஏப்ரல்-19, இந்தோனேசியாவில் ருவாங் எரிமலை வெடித்து வெளியாகியுள்ள கரும்புகை ஆகாயத்தில் கலந்து விமானங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தலாம் என ஐயுறப்படுகிறது.

அடர்த்தியான புகை விமானிகளின் பார்வை தூரத்தைப் பாதிக்கலாம்.

எரிமலை தொடர்ந்து புகையைக் கக்கினால் நிலைமை இன்னும் மோமசமாகலாம்.

அதாவது, அப்புகை மூட்டம் மறைய அதிக நாட்கள் பிடிக்கலாம் என பேரிடர் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

அதோடு, விமானங்கள் புகை மூட்டத்தைக் கடந்துச் செல்கையில், விமான இயந்திரம் புகையை உரிஞ்சி விட வாய்ப்புண்டு.

எரிமலை புகையாததால் அவை அதிக சூட்டில் இருக்கும்; அப்போது இயந்திரத்தினுள் அவை உருகி இயந்திரத்தில் கோளாறு ஏற்படலாம்.

இதனால் விமானங்கள் வெடித்துச் சிதறவும் வாய்ப்புண்டு என அவர்கள் பீதியைக் கிளப்பியுள்ளனர்.

எனவே, எரிமலை வெடிப்பு ஏற்பட்டு புகை காற்றில் கலக்கும் சமயங்களில் உலகம் முழுவதும் விமான நிறுவனங்கள் முழி விழிப்பு மற்றும் கண்காணிப்பு நிலையில் இருக்கும்.

எரிமலை கக்கும் புகையை உயர்ந்த இடத்தில் இருந்து குறிப்பாக இரவு நேரங்களில் காண்பது கடினம்.

முன்பொருமுறை பசிவிக் பெருங்கடல் நடுவே பயணிக்கும் போது போயிங் 747 விமானமொன்றின் 4 இயந்திரங்களும் தீப்பற்றியதை அவர்கள் சுட்டிக் காட்டினர்.

இது நடப்பது அரிது என்றாலும், பாதுகாப்புக் கருதி தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுவது அவசியம் என ஆராய்ச்சியாளர்கள் கூறியிருக்கின்றனர்.

ருவாங் எரிமலை வெடித்ததை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், 11,000 பேர் பாதுகாப்புக் கருதி வெளியேற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!