Latestமலேசியா

எழுத்தாளர் குணாவின் ‘கருவறையில் தொடங்கும் அறிவார்ந்த பெற்றோரியல்’ நூல் வெளியிட்டு விழா; ஜூன் 23

கோலாலம்பூர், ஜுன் 21 – நாடாறிந்த உளவியல் அறிஞர் கே.ஏ. குணா அவர்களின் கைவண்ணத்தில் மூன்றாவது நூலாக மலர்ந்துள்ளது, “கருவறையில் தொடங்கும் அறிவார்ந்த பெற்றோரியல்” நூல்.

இந்த அறிவார்ந்த பெற்றோரியல் நூலின் அவசியம் குறித்து எழுத்தாளரான கே.ஏ. குணா இவ்வாறு விளக்கமளிக்கிறார்.

தாயின் கருவறையில் வளரும் சிசுவின் வளர்ச்சி பற்றியும், தாயின் மன உளைச்சலால் சிசு மூளையில் ஏற்படுகின்ற தாக்கம் தொடங்கி குழந்தை பிறந்த பிறகு அடுத்த 18 ஆண்டுகள் எத்தகைய அறிவியல் ரீதியான அணுகுமுறைகளைப் பெற்றோர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கையாள வேண்டும் என்பதை இந்நூலில் வலியுறுத்தி கே.ஏ.குணா எழுதியிருக்கிறார்.

பெற்றோரியல் அணுகுமுறைகளுக்கு உரமூட்டுவதுடன், வாசகர்களின் சிந்தனையைத் தூண்டும் வகையில் அமைந்துள்ள இந்நூலில் கருத்துகள் மட்டுமின்று உளவியல் நிபுணரான அவரின் வாழ்க்கையில் கடந்து வந்த 32 உண்மை சம்பவங்களையும் பதிவிட்டுள்ளார்.

குடும்பத்தில் குழந்தைகளின் வாழ்க்கையில் தொடர்புள்ள பெற்றோர் முதல் தாத்தா-பாட்டி, ஆசிரியர்கள், திருமணம் செய்ய விருக்கும் புதிய தம்பதியர்கள் ஆகியோர் கட்டயமாக வாசிக்க வேண்டிய ஒரு நூலாக அமைகின்றது.

அறிவியல் ஆய்வுகள் உணர்த்தும் உளவியல் உண்மையின் அடிப்படையில் குழந்தை வளர்ப்பு அணுகுமுறைகளை உள்ளடக்கி எழுதப்பட்டிருக்கும் இந்நூல், வருகின்ற ஜுன் 23 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மஇகா தலைமையகம் நேதாஜி மண்டபத்தில் மாலை 4:30 மணிக்கு வெளியீடு காணவுள்ளது.

ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தலைமையில் வெளியீடு காணவுள்ள இந்நூலை, நிகழ்ச்சியில் வாங்கி கொள்ளலாம் என்கிறார் நூல் ஆசிரியர் கே.ஏ.குணா.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!