புத்ரா ஜெயா, ஏப் 22 – ஐக்கிய அரபு சிற்றரசில் அண்மையில் ஏற்பட்ட பெரிய அளவிலான வெள்ளப் பேரிடரில் மலேசியர்கள் எவரும் பாதிப்புக்கு உள்ளாகவில்லை. கடந்த செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட அந்த வெள்ளப் பேரிடருக்காக ஐக்கிய அரபு சிற்றரசிற்கு வெளியுறவு அமைச்சு அனுதாபம் தெரிவித்துக் கொண்டுள்ளது. இதுவரை அந்த பேரிடரில் மலேசியர்கள் எவரும் பாதிக்கப்பட்டதாக கண்டறியப்படவில்லையென வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் ஹசான் தெரிவித்தார். அங்கு ஏற்பட்ட வெள்ளத்தினால் நால்வர் உயிரிழந்தது குறித்து மலேசியா ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொண்டது.
75 ஆண்டுகளுக்குப் பின் அங்கு முதல் முறையாக அளவுக்கு அதிகமாக பெய்த மழையினால் ஏற்பட்ட மிகவும் மோசமான வெள்ளம் இன்று சீரடைந்தது. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டிருந்த விமான சேவைகள் உட்பட இதர அனைத்து நடவடிக்கைளும் மீண்டும் வழக்க நிலைக்கு திரும்பின. துபாயில் ஏற்பட்ட வெள்ளத்தில் மலேசியர்கள் எவரும் பாதிப்புக்கு உள்ளாகவில்லையென துபாயிலுள்ள மலேசிய தூதரக அலுவலகம் தெரிவித்திருப்பதாக Muhamad Hasan தெரிவித்தார்.