Latestமலேசியா

ஒருவழியாக பொது வெளியில் ‘தரிசனம்’ தந்த கேட் மிடில்டன்; சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி

லண்டன், மார்ச்-20, வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டனின் புதியப் புகைப்படங்கள் வெளியாகி, அவரின் உடல் நிலை குறித்து ஒரு வாரமாக உலவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளன.

கேட் தனது கணவரும் பிரிட்டன் பட்டத்து இளவரசருமான வில்லியமுடன் மேற்கு லண்டனில் உள்ள Windsor பண்ணைக்குச் சென்ற புகைப்படங்ளையும் வீடியோவையும் பிரபல The Sun பத்திரிகை வெளியிட்டுள்ளது.

அதில் அவர் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதைப் பார்க்க முடிகிறது.

இங்கிலாந்து ஊடகங்களில் முதல் பக்கச் செய்தியாக இது வெளி வந்திருப்பது அந்நாட்டு மக்கள் மத்தியிலும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

பக்கிங்ஹம் அரண்மனை கடந்த வாரம் வெளியிட்ட தாமும் தனது 3 பிள்ளைகளும் இருக்கும் அதிகாரப்பூர்வ போட்டோ, உண்மையில் எடிட் செய்யப்பட்ட ஒன்று என கேட் ஒப்புக்கொண்டு சர்ச்சையில் சிக்கினார்.

கடைசியாக கிறிஸ்மஸ் அன்று தேவாலய வழிபாட்டில் பங்கேற்ற கேட் அதன் பிறகு பொது நிகழ்ச்சிகள் எதிலும் கலந்துக் கொள்ளவில்லை; பிறகு ஜனவரியில் திடீரென வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

இதனால் அப்போதே அவரின் உடல் நலம் குறித்து சந்தேகம் எழுந்தது.

இந்த நிலையில் எடிட் செய்யப்பட்ட போட்டோவும் வெளியாக, அரண்மனை எதையோ மறைப்பதாக சந்தேகம் வலுவடைந்தது.

போட்டோ எடிட் செய்யப்பட்டதற்கு கேட் மன்னிப்பு கேட்டாலும், இதுநாள் வரை அவரை ஆதரித்து வந்த பிரிட்டன் ஊடகங்கள் கூட, அவ்விஷயத்தில் அவரை விமர்சனம் செய்தன.

ஆனால், இப்போது கேட் ஆரோக்கியமாக இருப்பதை உறுதிச் செய்யும் விதமாக புகைப்படங்களும் வீடியோவும் வெளியாகி 3 மாத கால சர்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!