
புது டெல்லி, மே-13-டீ விற்க சொகுசு காரா?
ஆம், 5 கோடி ரூபாய் மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் காரை ஒரு லட்சம் ரூபாய் வாடகைக்கு எடுத்து, அதில் டீ விற்று அசத்தியிருக்கிறார் இந்தியாவைச் சேர்ந்த ஓர் இளைஞர்.
Royal Chai என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த முயற்சியில், வாடிக்கையாளர்களுக்குச் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படுகிறது.
வெறும் டீ மட்டுமல்லாமல், பிரீமியம் பிஸ்கட்களும் வழங்கப்படுகின்றன.
இந்த வினோதமான காட்சியைப் பார்க்கவே மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
சரி, இந்தத் தொழிலில் இலாபம் கிடைத்ததா? என நீங்கள் கேட்பது எங்களுக்கும் தெரிகிறது.
அதற்கு பதில் கொடுக்கும் வகையில், இந்த இளைஞர் வெளியிட்ட வீடியோவில் தனது வரவு-செலவு கணக்கைப் பகிர்ந்துள்ளார்.
கார் வாடகை மற்றும் இதர செலவுகள் சேர்த்து மொத்தம் 108,000 ரூபாய் அவர் முதலீடு செய்துள்ளார்.
ஆனால், அவருக்குக் கிடைத்த வருமானம் 88,400 ரூபாய் மட்டுமே.
கிட்டத்தட்ட 20 ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்ட போதிலும், அந்த இளைஞர் கவலைப்படவில்லை.
“பணம் போனாலும் பரவாயில்லை, மக்களின் முகத்தில் மகிழ்ச்சியைப் பார்த்ததே எனக்குப் போதும்” என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைத் தளங்களில் 15 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்து வைரலாகி வருகிறது.



