Latestமலேசியா

கங்காரில் புயலில் மரம் சாய்ந்து மேலே விழுந்ததில் மோட்டார் சைக்கிளோட்டியான பெண்ணின் கரு கலைந்தது

கங்ஙார், ஜூன்-24, பெர்லிஸ், கங்ஙாரில் புயல் காற்றில் மரம் சாய்ந்து மேலே விழுந்ததில் மோட்டார் சைக்கிளோட்டியான இளம் பெண்ணும் அவரின் கணவரும் படுகாயமடைந்தனர்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை Simpang Empat, Kampung Padang Benta-வில் நிகழ்ந்த அச்சம்பவத்தில், கர்ப்பிணியான 18 வயது அப்பெண்ணின் கரு கலைந்தது பெரும் வேதனையாகும்.

Yamaha Y15 மோட்டார் சைக்கிளோட்டிய நுராலேயா ஷஸ்ரீனா ரொஸ்லான் அனுவாருக்கு (Nuraleya Syazreena Roslan Anuar) தலையில் இரத்தக் கசிவு ஏற்பட்டது, கங்ஙார் துவாங்கு ஃபாவ்சியா (Hospital Tuanku Fauziah) மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் தெரிய வந்தது.

அதோடு, அவரின் வலது மற்றும் இடது இடுப்பு எலும்புகள் முறிந்து, வயிற்றில் சுமந்த 5 மாத கருவும் கலைந்தது உறுதிச் செய்யப்பட்டது.

நுராலேயாவும், வலது தொடை எலும்பு முறிந்த அவரின் கணவரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தின் போது உணவகமொன்றில் சாப்பிட்டு விட்டு இருவரும் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்கள்.

மனைவி மோட்டார் சைக்கிளை ஓட்ட, கணவர் பின்னால் அமர்ந்து சென்றார்.

எனினும் வழியில் மரம் சாய்ந்து அவர்கள் மேலே விழுந்தது தொடக்கக் கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!