Latestமலேசியா

கடுமையான மழையின்போது கால்வாயில் விழுந்த சிறுவன் நீரில் அடித்துச் செல்லப்பட்தாக அஞ்சப்படுகிறது

கோலாலம்பூர், ஏப் 29- சுங்கை பூலோவில், Bandar Puncak Alam பகுதியில், ஒரு சிறுவன் கால்வாயில் தவறி விழுந்ததால் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக அஞ்சப்படுகிறது.

நேற்று பிற்பகல் 3 மணிக்கு நடந்த இந்தச் சம்பவத்தில், பாதிக்கப்பட்ட 10 வயதான கைரில் இஸானி கைசலுலினுடின் (Khairil Izani Khaizalullinudin) கடுமையான மழையின்போது Puncak Alam மில் உள்ள ஒரு மைதானத்தில் காற்பந்து விளையாடிக் கொண்டிருந்தபோது இந்த துயரச் சம்பவம் நடந்ததாக கூறப்பட்டது.

இரவு மணி 7.10 க்கு இந்தச் சம்பவம் குறித்து தமக்கு தகவல் கிடைத்ததாக சுங்கை பூலோ மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் ஹபீஸ் முகமட் நூர், தெரிவித்தார்.

சம்பவம் நடந்த நேரத்தில், சிறுவன் கைரில் இஸானி 11 மற்றும் 12 வயதுடைய இரண்டு நண்பர்களுடன் கனமழையில் கால்பந்து மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது அருகிலுள்ள கால்வாய் பகுதிக்கு சென்றதாகவும் , அப்போது கால்வாயில் விழுந்ததால் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பபட்டதாக கூறப்படுகிறது.

சம்பந்தப்பட்ட பகுதியில் போலீஸ், தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் தொடர்ந்து தேடும் மற்றும் மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக Khairil Izani கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!