Latest

கூலாயில் 61 வயது முதியவர் பொன்னுசாமி மாயம்: கண்டுபிடித்து தரக் கோரி போலீஸ் அவசர வேண்டுகோள்

கூலாய், ஏப்ரல்-29-ஜோகூர், கூலாயில் கடந்த மார்ச் மாதம் முதல் காணாமல் போன 61 வயதுடைய பொன்னுசாமி மாரியப்பன் என்பவரைத் தேடுவதற்கு பொது மக்களின் உதவியை மாவட்டப் போலீஸ் கோரியுள்ளது.

கூலாய் பெசாரில் உள்ள தனது வீட்டிலிருந்து வெளியேறிய பொன்னுசாமி இதுவரை திரும்பவில்லை.

சுமார் 169 சென்டி மீட்டர் உயரமும், 60 கிலோ எடையும் கொண்ட இவர், உருண்டையான முகம் மற்றும் கருப்பு கலந்த நரைமுடி கொண்டவர்.

2019-ஆம் ஆண்டு முதல் மனநலம் பாதிக்கப்பட்டிருந்த இவரைக் காணாமல் குடும்பத்தினர் மிகுந்த கவலையில் உள்ளனர்.

அவரது சகோதரர் மற்றும் போலீஸார் பல இடங்களில் தேடியும் இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

​இவரைப் பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால், உடனடியாக விசாரணை அதிகாரியை 012-9642245 என்ற எண்ணிலோ அல்லது கூலாய் மாவட்ட போலீஸ் தலைமையகத்தை 07-6632222 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!