Latestமலேசியா

கோலாலம்பூரில் அடுக்குமாடி குடியிருப்பின் 38வது மாடியிலிருந்து பச்சிளம் குழந்தையை வீசிய தாய்: 2 ஆண்டுகள் சிறை தண்டனை

கோலாலம்பூர், ஏப்ரல்-30-கோலாலம்பூரில் அடுக்குமாடி குடியிருப்பின் 38-ஆவது மாடியிலிருந்து தனது பச்சிளம் குழந்தையை வீசிக் கொன்ற 24 வயது பெண்ணுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Lua Mei Zhu, நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

கடந்தாண்டு பிப்ரவரி மாதம், வீட்டுக் குளியலறையில் பிரசவித்த அக்குழந்தையை, ஒரு பதற்றத்தில் ஜன்னல் வழியாக வெளியே அவர் வீசியுள்ளார்.

9-ஆவது மாடியில் இருந்த ஒரு நபர், தனது வீட்டின் பால்கனியில் படுகாயங்களுடன் இருந்த குழந்தையைக் கண்டெடுத்து போலீஸாருக்கு தகவல் அளித்தார்.

பிரசவத்திற்குப் பிறகு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் பயம் காரணமாகவே அவர் இவ்வாறு செய்ததாக தற்காப்பு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.

திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானதால், குடும்பத்தினர் மற்றும் சமூகத்தின் அவதூறுக்கு அஞ்சி அவர் இச்செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

குழந்தைக்குத் தந்தையான ஆடவர் வேற்று இனம் மற்றும் மதத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் அது பற்றி வீட்டில் சொல்லத் தயங்கி அவர் மறைத்துள்ளார்.

இருப்பினும், ஓர் அப்பாவி உயிர் பறிக்கப்பட்டிருப்பதால் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் வலியுறுத்தினார்.

அந்தப் பெண் ஏற்கனவே மனநல சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த இரண்டு ஆண்டு சிறை தண்டனை, அவர் கைதுச் செய்யப்பட்ட 2025 பிப்ரவரி முதல் அமுலுக்கு வரும் என நீதிபதி உத்தரவிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!