Latestமலேசியா

பெக்கானில் வன்முறை: மாணவரைத் தாக்கிய 6 மாணவர்கள் அதிரடி கைது

பெக்கான், ஏப்ரல்-30-பகாங், பெக்கானில் முதலாம் படிவம் பயிலும் மாணவர் ஒருவரைத் தாக்கிய புகாரில், அதே பள்ளியைச் சேர்ந்த 6 மாணவர்களைப் போலீஸார் கைதுச் செய்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமை மாலை பெக்கான் மாவட்டத்திலுள்ள MUIP எனும் மாநில இஸ்லாமிய சமய மற்றும் மலாய் சடங்குத் துறை அலுவலகம் அருகே இந்த வன்முறைச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவரைச் சூழ்ந்து கொண்டு தாக்கி காயப்படுத்தியதாக 13 முதல் 15 வயதுக்குட்பட்ட 6 மாணவர்கள் பிடிபட்டுள்ளனர்.

இரு ​மாணவர்களுக்கு இடையே கொடுக்கல்-வாங்கல் பிரச்னையால் ஏற்பட்ட ஒரு சிறிய மனஸ்தாபம், பின்னர் மோதலாக மாறியுள்ளது.

இதில் வலது கன்னத்தில் காயமடைந்த மாணவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

குற்றவியல் சட்டத்தின் கீழ் பெக்கான் போலீஸார் வழக்குப்பதிவுச் செய்துள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!