
அலோர் காஜா, மே-19-கடந்த மே 4 ஆம் தேதி மலாக்கா அலோர் காஜா குவாலா சுங்கை பாரு (Kuala Sungai Baru) பகுதியில் பயண கட்டணம் செலுத்த மறுத்த நான்கு இளைஞர்கள், பெண் e-hailing ஓட்டுநரை தாக்கி கழுத்தை நெரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இந்தச் சம்பவத்தில் சம்பவத்தில், 41 வயதான ஓட்டுநர் காயமடைந்தார் என்று அலோர் காஜா (Alor Gajah) மாவட்ட போலீஸ் தலைவர் சுப்பரின்தென்டென்ட் அஹ்மட் அபு பாக்கார் (Superintendent.. Ahmad Abu Bakar) கூறினார்.
பாதிக்கப்பட்ட பெண், புக்கிட் ரம்பாய் (Bukit Rambai) பகுதியில் இருந்து நான்கு பயணிகளை பெக்கான் குவாலா சுங்கை பாரு (Pekan Kuala Sungai Baru) நோக்கி அழைத்து சென்றபோது, காட்டு பகுதி அருகே வாகனத்தை நிறுத்துமாறு அவர்கள் கேட்டுள்ளனர்.
சந்தேகமடைந்த ஓட்டுநர் கைபேசியில் பதிவு செய்ய தொடங்கியதும், மூவர் திடீரென அவரை தாக்கி துணியால் கழுத்தை நெரித்ததாக கூறப்படுகிறது.
அந்த பெண் காரை ஓட்டி தப்பித்து பின்னர் போலீசில் புகார் அளித்தார். அவரது மூக்கு, கழுத்து மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இந்நிலையில், சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு 14 வயது சிறுமிகள் மற்றும் 15, 17 வயதுடைய சிறுவர்கள் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.



