Latestஉலகம்

கதை அல்ல நிஜம்: குழந்தையின் தங்க வளையலை திருடிய காக்கா திருடன்

கோழிக்கோடு, ஜன 8 – கேரளாவில் காகம் ஒன்று குழந்தையின் தங்க வளையலைத் திருடிச் சென்று தென்னை மரத்தின் மறைத்து வைத்த சுவாராஸ்யமான சம்பவம் ஒன்று சமீபத்தில் நிகழ்ந்துள்ளது.
கோழிக்கோடு பகுதியை சேர்ந்த தம்பதியினரான நசீர் மற்றும் ஷரீபா, உறவினரின் திருமணத்திற்கு சென்று திரும்பி வந்த பிறகு அவர்களது மகள் பாத்திமா, அணிந்திருந்த 6 கிராம் எடையுள்ள தங்க வளையலையும் சங்கிலியையும் கழற்றி, தாள் ஒன்றில் சுற்றி சலவை கூடையின் மேல் வைத்துள்ளார்.

அதன் பின்னர், 10 நாள்கள் கழித்து மற்றொரு உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு புறப்பட்டபோது, அந்த தங்க வளையலும் சங்கிலியையும் தேடிய வேளை அப்போதுதான் சலவை கூடையின் மேல் வைத்தது ஞாபகம் வர அதில் போய் பார்த்தபோது காத்திருந்தது அதிர்ச்சி. காரணம் அங்கு வளையலையும் சங்கிலியையும் காணவில்லை.

உடனடியாக, உறவினர்கள் அண்டை வீட்டுக் காரர்கள் என அனைவரின் உதவியுடன் தேடுதல் வேட்டை தொடங்கியது. ஒரு வழியாக வீட்டின் பின்புறம் உள்ள தென்னை மரத்தின் அடியில் குப்பைகளுக்கு நடுவே அந்த தங்க சங்கிலி கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் வளையல் காணவில்லை.

இந்நிலையில், தேடுதல் வேட்டையின்போது, ஒரு கவரின் வளையல்கள் உள்ள பிளாஸ்டிக் பையை சுவர் மீது வைத்துவிட்டு, அனைவரும் மும்முரமாக தங்க வளையலை தேடிக் கொண்டிருந்தனர்.
அப்போதுதான் எதார்த்தமாக காகம் ஒன்று அந்த பிளாஸ்டிக் பையில் இருந்த வளையல் ஒன்றை லாவகமாக தூக்கிக் கொண்டு தென்னை மரத்தின் மீது உள்ள அதன் கூட்டின் பத்திரப்படுத்தும் காட்சியை உறவினர் ஒருவர் பார்த்துவிட, நம்பிக்கை இல்லாமல் சரி அங்கேயும் ஒரு முறை பார்த்துவிடுவோம் என்று தென்னை மரத்தில் ஏறியுள்ளனர். அப்போதுதான் கையும் களவுமாக பிடிபட்டான் காக்கா திருடன்.

காணாமல் போன தங்க வளையல் காக்காவின் கூட்டுக்குள் இருக்க, அப்போதுவரை பதற்றத்துடன் இருந்த வீடு சற்று நேரத்தில் சிரிப்பொலியில் நிரம்பியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!