
காஜாங், ஜனவரி-30, காஜாங் மருத்துவமனையில் 7 வயது சிறுமி மரணமடைந்த சம்பவத்தில், அவளது பெற்றோர் கைதாகியுள்ளனர்.
இருவரும், புதன்கிழமை விடியற்காலை 1 மணிக்கு சுயநினைவற்ற நிலையில் மகளை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட போதே மகள் இறந்து விட்டதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.
இந்நிலையில் அன்று மதியம் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில், சிறுமியின் உடலில் பழைய மற்றும் புதியக் காயத் தளும்புகள் கண்டறியப்பட்டன.
அவளின் மரணத்திற்கு, கூர்மையற்ற ஆயுதத்தால் அடிவயிற்றில் ஏற்பட்ட காயமே காரணமென்றும் உறுதிச் செய்யப்பட்டது.
இதையடுத்து பிள்ளையை சித்ரவதை செய்த சந்தேகத்தின் பேரில் 38, 40 வயது மதிக்கத்தக்க பெற்றோர் கைதானதாக, காஜாங் போலீஸ் தலைவர் துணை ஆணையர் Naazron Abdul Yusof தெரிவித்தார்.
கொலைக் குற்ற விசாரணைக்காக இன்று முதல் இருவரும் தடுத்து வைக்கப்படவுள்ளனர்.