Latestவிளையாட்டு

கால்பந்து திடலில் மின்னல் தாக்கி மலேசியர் உட்பட 12 பேர் காயம்; ஒருவர் மரணம்

சுங்கை கோலோக், ஆகஸ்ட்.05 – கிளந்தான், Sungai Golokக்கில் நேற்று மாலை கால்பந்துப் போட்டியொன்றின் போது திடலில் மின்னல் தாக்கியதில், தாய்லாந்து கால்பந்து வீரர் ஒருவர் உயிரிழந்தார். மலேசியர் ஒருவர் உட்பட மேலும் 12 பேர் காயமடைந்தனர்.

Santiphap திடலில் Golok FA Cup கால்பந்துத் தொடரின் அரையிறுதிப் போட்டியின் போது, மாலை 5.30 மணியளவில் அச்சம்பவம் நிகழ்ந்ததாக Sungai Golok காவல் துறைத் தலைவர் தெரிவித்தார். இரு அணிகளுக்கு இடையிலான போட்டி ஏற்கனவே முடிவடைந்திருந்த நிலையில், பலத்த மழையைத் தொடர்ந்து திடலின் நடுப் பகுதியில் மின்னல் தாக்கியதாக அவர் கூறினார்.

அதில் தாய்லாந்து கால்பந்து வீரர் உயிரிழந்தார். காயமடைந்த மலேசியர் Mohammad Alif Ezzahan Zulkifli என அடையாளம் காணப்பட்டதாகவும், தாய்லாந்து மற்றும் மலேசிய வீரர்களைக் கொண்ட கலப்பு அணியில் அவர் விளையாடி வந்ததாகவும் கூறப்படுகிறது. காயமடைந்த மற்றவர்கள் Sungai Golok மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். காவல்துறை விசாரணையைத் தொடருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!