Latestமலேசியா

Sports Toto ஜாக்பாட்டில் 1.29 மில்லியன் ரிங்கிட் தொகை வென்ற இல்லத்தரசி – அவருக்கு அடித்த இரண்டாவது ஜாக்பாட்

கோலாலம்பூர், ஆகஸ்ட்.05- பேராக் மாநிலத்தைச் சேர்ந்த 50 வயதுடைய இல்லத்தரசி ஒருவர், ஆகஸ்ட் 1-ஆம் தேதி நடைபெற்ற குலுக்கலில் Toto 4D Jackpot 1 பரிசான 12,946,225.55 ரிங்கிட் தொகையை வென்றுள்ளார். அவருக்கு கிடைத்த இரண்டாவது ஜாக்பாட் வெற்றி அதுவாகும்.

மூன்று ஆண்டுகளுக்கு முன் Lucky Pick சீட்டு மூலம் அவர் சுமார் 1.4 மில்லியன் ரிங்கிட்டை வென்றார். கோவிட் காரணமாக நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு இருந்த சமயம் தாமும் கணவரும் வேலைகளை இழந்ததால் கடந்த மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து ‘லக்கி பிக்’ எண்களை வாங்கி வந்ததாக அவர் தெரிவித்தார். ஒருமுறை Lumutடில் மதிய உணவுக்காக Sitiawan நகரில் நின்றிருந்த போது அவர் ஒரு ‘லக்கி பிக்’ சீட்டை வாங்கியுள்ளார்.

அது தங்களது வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக மாற்றிவிடும் என நினைத்துக்கூட பார்க்கவில்லை என STM Lottery Sdn Bhd தலைமையகத்தில் தனது கணவருடன் வந்து பரிசுத் தொகையைப் பெற்றுக் கொள்ளும்போது அவர் கூறினார். இரண்டாவது தடவையாக இம்முறை தொடக்கத்தில் எண்களைத் தவறாகப் படித்து விட்டோம் என நினைத்துள்ளார். ஒருமுறை ஜாக்பாட் பரிசு வென்றதே பெரும் பாக்கியமாக இருந்ததாகக் குறிப்பிட்ட அம்மாது, இரண்டாவது முறையாக வென்றதைக் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியவில்லை என மகிழ்ச்சி பொங்கக் கூறினார்.

சனிக்கிழமையன்று நடைபெற்ற 6165/26 எண் கொண்ட குலுக்கலில், 5900 மற்றும் 6900 ஆகிய எண்கள் வெற்றி எண்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டன. கிடைத்த பரிசுத் தொகையைத் தமது ஓய்வுக் கால நிதியாகப் பயன்படுத்தவும், அதே சமயம் அதில் ஒரு பகுதியை நலிந்த சமூகத்தினருக்கும் தொண்டு நிறுவனங்களுக்கும் உதவ ஒதுக்கி வைக்கத் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!