Latestஉலகம்

கிறிஸ்துமஸ் தீவில் 10 கோடிக்கும் அதிகமான சிவப்பு நண்டுகள் கடலை நோக்கி இடம்பெயர்வு

சிட்னி, நவம்பர் 19 – ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவில் 100 மில்லியனுக்கும் அதிகமான சிவப்பு நண்டுகள் (Red Crabs), ஆண்டுதோறும் நடைபெறும் இனப்பெருக்க இடம்பெயர்வைத் தொடங்கியுள்ளன.

மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், காடுகளில் இருந்து கடலை நோக்கி நகரும் இந்த நண்டுகள், இனப்பெருக்கத்திற்காகக் கடலுக்குச் செல்கின்றன. நிலவின் சுழற்சியைப் பொறுத்து நடைபெறும் இந்த இடம்பெயர்வின்போது, சாலைகள், பாலங்கள் மற்றும் காடுகள் முழுவதும் நண்டுகள் கூட்டமாகக் காணப்படுகின்றன.

‘Yellow Crazy’ எறும்புகளின் தாக்கத்தால் சிவப்பு நண்டுகளின் எண்ணிக்கை சுமார் 50 மில்லியனாக குறைந்திருந்த நிலையில், தொடர்ச்சியான பாதுகாப்பு நடவடிக்கைகளால் தற்போது 100 மில்லியனுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாகப் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த நண்டுகள் தீவின் வனச் சூழலையும் சுற்றுச்சூழல் சமநிலையையும் பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!