Latestமலேசியா

மஇகா-வின் எஸ். நடராஜா உட்பட 10 பேர் மலாக்கா மாநில ஆட்சிக்குழுவில் பதவியேற்பு

மலாக்கா, நவம்பர் 19 – கடந்த சனிக்கிழமை நடைபெற்ற மாநிலத் தேர்தலில் தேசிய முன்னணி (BN) – பெரிக்காத்தான் நேஷனல் (PN) கூட்டணி அமோக வெற்றி பெற்று, 28 தொகுதிகளில் 24 இடங்களைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, மலாக்கா மாநிலத்தின் புதிய ஆட்சிக்குழுவில் 10 சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று பதவியேற்றனர். இதில் மஇகா சார்பில் காடெக் (Gadek) தொகுதியில் வெற்றி பெற்ற எஸ். நடராஜாவும் (S Nadarajah) இடம்பெற்றுள்ளார்.

ஆயர் கெரோவிலுள்ள (Ayer Keroh) செரி நெகிரி வளாகத்தில் (Kompleks Seri Negeri), மாநில ஆளுநர் அலி ருஸ்தாம் (Ali Rustam) முன்னிலையில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

புதிய ஆட்சிக்குழுவில் டாக்டர் அக்மால் சாலே (Dr Akmal Saleh), ராய்ஸ் யாசின் (Rais Yasin), அப்துல் ரசாக் அப்துல் ரஹ்மான் (Abdul Razak Abdul Rahman), ஃபைருல் நிசாம் ரோஸ்லான் (Fairul Nizam Roslan) மற்றும் ஹமீட் மைதீன் குன்ஜு பஷீர் (Hameed Mytheen Kunju Basheer) ஆகிய ஐந்து பழைய உறுப்பினர்கள் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதிதாக ரித்வான் அலி (Ridhwan Ali), லிம் பான் ஹோங் (Lim Ban Hong), எஸ். நடராஜா (S Nadarajah), கைதிரா அபு ஜஹார் (Khaidhirah Abu Zahar) மற்றும் ரிட்ஸுவான் சாரிப் (Ridzuan Sarif) ஆகிய ஐந்து பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாநிலத் தேர்தலில் அம்னோ 18, மசீச 2, மஇகா 1, பாஸ் 2 மற்றும் வவாசான் 1 இடங்களைக் கைப்பற்றின. அதேவேளை, பக்காத்தான் ஹராப்பான் சார்பில் டிஏபி நான்கு இடங்களை வென்றது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!