Latestஇந்தியா

MLA வி.எஸ். பாபு மறைவு: தமிழ்நாடு கொளத்தூர் தொகுதி காலியானது – மீண்டும் களமிறங்குவாரா மு.க. ஸ்டாலின்?

சென்னை, நவம்பர் 19 – தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு தனது 75 வயதில் உடல்நலக் குறைவால் இன்று பிற்பகல் 2.24 மணியளவில் காலமானார்.

கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி கடுமையான மூச்சுத்திணறல் காரணமாகச் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், 70 நாட்களுக்கும் மேலாகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

அவரது மறைவைத் தொடர்ந்து கொளத்தூர் தொகுதி காலியாகியுள்ளது. கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வி.எஸ். பாபு வெற்றி பெற்றிருந்தார்.

இதனால், நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் தவெக சார்பில் யார் போட்டியிடுவார், திமுக சார்பில் மு.க. ஸ்டாலின் மீண்டும் களமிறங்குவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதற்கிடையில், வி.எஸ். பாபுவின் மறைவால் தமிழக சட்டமன்றத்தில் காலியாகியுள்ள தொகுதிகளின் எண்ணிக்கை ஆறாக அதிகரித்துள்ளது. எனினும், ஆளுங்கட்சியான தவெக கூட்டணியின் பெரும்பான்மைக்கு எந்தப் பாதிப்பும் இல்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!