Latestமலேசியா

குவாந்தானில் 3 வியட்நாமியர்களுக்கு 12 ஆண்டு சிறை, RM128.9 மில்லியன் அபராதம்

குவாந்தானில் 3 வியட்நாமியர்களுக்கு 12 ஆண்டு சிறை, RM128.9 மில்லியன் அபராதம்

பஹாங், பிப்ரவரி 19 –

பஹாங் குவாந்தானில் பாதுகாக்கப்பட்ட வனவிலங்கு பகுதிகளை சட்டவிரோதமாக வைத்திருந்த மூன்று வியட்நாமியர்கள் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அம்மூவருக்கும் மொத்தமாக 128.9 மில்லியன் ரிங்கிட் அபராதமும் 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. அபராதத்தைச் செலுத்தத் தவறினால் மேலும் 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டது.

2023 நவம்பர் 15ஆம் தேதி ஜாலான் சுங்கை லெம்பிங் (Jalan Sungai Lembing) பகுதியில் உள்ள வீட்டில் சுமார் 1,000 வனவிலங்கு பகுதிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இவர்கள் மீது வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, முழு விசாரணைக்கு பிறகு தண்டனை வழங்கப்பட்டது. இந்தத் தீர்ப்பு, மலேசியாவில் வனவிலங்கு கடத்தலுக்கு எதிரான கடுமையான நடவடிக்கையை வெளிப்படுத்துகிறது

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!