
குவா மூசாங், ஜூலை-29-கிளந்தான், குவா மூசாங்கில் விரைவுப் பேருந்து ஒன்றில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதை அடுத்து, 2 பேருந்து ஓட்டுநர்கள் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.
திங்கள்கிழமை குவா மூசாங் R&R பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, 39 மற்றும் 46 வயதான அவ்விருவரையும் போலீஸார் கைதுச் செய்தனர்.
ஓட்டுநர் இருக்கைக்குப் பின்னால் மறைத்து வைக்கப்பட்டிருந்த syabu வகைப் போதைப்பொருளை அதிகாரிகள் கண்டெடுத்தனர்.
இதனுடன் தொடர்புடைய சுமார் 2,500 மலேசிய ரிங்கிட் மதிப்புள்ள பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இருப்பினும், நடத்தப்பட்ட முதற்கட்ட போதைப்பொருள் பரிசோதனையில் இரு ஓட்டுநர்களுக்கும் போதைப்பொருள் பயன்படுத்தியதற்கான முடிவுகள் எதிர்மறையாகவே வந்துள்ளன.
கைதுச் செய்யப்பட்ட இருவரிடமும் 1952-ஆம் ஆண்டு அபாயகர போதைப்பொருள் சட்டத்தின் கீழ் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



