Latestஇந்தியாஉலகம்

குவைத்தில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டிடத்தில் தீ விபத்து; 40 இந்தியர்கள் உட்பட 49 பேர் மரணம்

புதுடில்லி, ஜூன் 13 – குவைத்தின் Mangaf பகுதியில் ஆறு மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 40 இந்தியர்கள் உட்பட 49 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர் கேரளா மற்றும் தமிழ் நாட்டை சேர்ந்த தொழிலாளர்கள் அதிக அளவில் தங்கியிருந்த கட்டிடத்தில் ஏற்பட்ட தீயில் கேராளவைச் சேர்ந்த 11 பேர் உட்பட 40 இந்தியர்கள் மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. குறைந்தது 160 பேர் தங்கியிருந்த அந்த கட்டிடத்தில் இருந்த சமையல் அறைப் பகுதியிலிருந்து தீ பரவியதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். உள்ளூர் நேரப்படி நேற்று விடியற்காலை ஆறு மணியளவில் அந்த கட்டிடத்தில் தீப்பிடித்தது. சிலர் உயிர் தப்புவதற்காக 5ஆவது மாடியிலிருந்து குதித்தபோது இறந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. காயம் அடைந்தவர்கள் குவைத்திலுள்ள ஐந்து அரசாங்க மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலரது நிலைமை சீராக இருப்பதாக அறிவிக்கப்பட்டடுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொண்டார். இந்த பேரிடரில் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்தனை செய்வதாக மோடி x தளத்தில் பதிவிட்டுள்ளார்.

உயிரிழந்த இந்திய தொழிலாளர்களின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் உதவித் தொகையாக இரண்டு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். குவைத்திலுள்ள இந்திய தூதரகம் நிலைமையை அணுக்கமாக கவனித்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கு உள்ளூர் அதிகாரிகளுடன் இந்திய தூதரகம் ஒத்துழைப்பு நல்கிவருகிறது என இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சுப்ரமணியம் தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பில் குவைத் வெளியுறவு அமைச்சர் Abdulah Ali Al Yahya வுடன் தாம் அடிக்கடி தொடர்பு கொண்டு வருவதாகவும் ஜெய்சங்கர் கூறினார். இது குறித்து து முழுமையான விசாரணை நடத்தப்படும் என்பதோடு இதற்கான பொறுப்பானர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குவைத் அரசாங்கம் உறுதியளித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!