Latestமலேசியா

கூகளில் அதிகம் தேடப்படும் சொல்; மடானி

கோலாலம்பூர், பிப் 29 – டத்தோ ஸ்ரீ அன்வார் இபராஹிம் ஆட்சிக் காலம் தொடங்கி மலேசிய மடானி என்னும் சொல் மிகவும் பிரபலமாகி விட்டது எனலாம்.

அதிலும், ஒவ்வொரு புதிய திட்டத்திற்கு மடானி ரஹ்மான் திட்டம், மடானி அரிசி திட்டம், மடானி மருத்துவத் திட்டம் என அவ்வபோது மடானி என்னும் சொல் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே ஒவ்வொரு புதிய திட்டம் அறிமுகம் செய்யும்போதும் கூகளில் அதிகம் தேடப்பட்டும் சொல்லாக இந்த மடானி சொல் வெளிப்பட்டுள்ளது.

இந்நிலையில், மடானியில் அதிக தேடல் ஆர்வம் கொண்ட மாநிலமாக புத்ராஜெயா முன்னிலை வகிக்கிறது. அதைத் தொடர்ந்து கிளந்தான், பெர்லிஸ், திராங்கானு, லாபுவான், சபா, கெடா, பேராக், சரவாக் மற்றும் பகாங் ஆகியவை அடங்கும்.

மடானி என்று தேடுபவர்களிடையே மிகவும் பிரபலமான இரண்டு தலைப்புகளை அடையாளம் காணப்பட்டுள்ளது. புத்ராஜெயா, லாபுவான், சபா, பேராக், சரவாக் மற்றும் பகாங் ஆகிய மாநிலங்களில் உள்ள மக்கள் ‘மலேசியா மடானி’ என்ற சொற்றொடரை தேடுகின்றனர். மறுபுறமோ, கிளந்தான், பெர்லிஸ், திரெங்கானு மற்றும் கெடா மாநில மக்கள் ‘மருந்து’ என்ற சொற்றொடரை இணைத்து தேடுவதாகத் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், கூகளில் தேடும் ட்ரெண்டைக் கூர்ந்து கவனித்தால் ‘மடானி’ எனும் சொல் எந்தெந்த மாநிலங்களில் அதிகம் ஆக்கிரமித்துள்ளது என்பதையும் அறிய முடிகிறதாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!