Latestமலேசியா

கூடுதல் பிறப்பு விகிதத்தினால் மலாய்க்காரர்கள் பிரதமர் பதவியை இழக்க மாட்டார்கள்

கோலாலம்பூர், டிச. 17 – மலாய்க்காரர்கள் அதிகமான பிள்ளைகளைப் பெற்று அவர்களின் பிறப்பு விகிதம் மற்ற அனைவரையும் விட வேகமாக வளர்ந்து வருவதால், எதிர்காலத்தில் மலாய்க்காரர்கள் தொடர்ந்து நாட்டின் பெரும்பான்மையாக இருப்பார்கள் என்பதால் பிரதமர் பதவியை இழக்கமாட்டார்கள் என அமானாவின் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் சாபு தெரிவித்திருக்கிறார்.

பிரதமர் பதவியை வகிப்பதற்கான இன அடிப்படையிலான தேவை குறித்து கூட்டரசு அரசியலமைப்பு சட்டத்தில் தெளிவாக எதுவும் கூறப்படாவிட்டலும் பெரும்பான்பையாக இருப்பதால் அரசாங்கத்தை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கான வாய்ப்பை மலாய்க்காரர்களுக்கு ஏற்படுத்தியிருப்பதாக அமானா கட்சியின் மாநாட்டிற்குப் பிறகு அவர் கூறினார்.

அதிகமான பிள்ளைகளை மலாய்க்காரர்கள் பெற்றுக்கொள்கின்றனர். அதேவேளையில் சீனர்கள் அதிக பிள்ளைகளை பெற்றுகொள்ள விரும்புவதில்லையென முகமட் சாபு கூறியுள்ளார்.

வேண்டுமென்றே மக்களின் மனதை இனத்துவேச அடிப்படையில் சிந்திக்க வைக்கும் வகையில் இந்த விவகாரம் இப்போது கையில் எடுக்கப்பட்டுள்ளது.

இதன்வழி பெரிக்காத்தான் நேசனல் மலாய்க்காரர்களின் நிலையை காப்பாற்றுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறது என முகமட் சாபு தெரிவித்தார்.

கடந்த பொதுத்தேர்தலுக்குப் பிறகு ஏற்பட்ட அரசியல் மாற்றத்தால்
மலாய்க்கார நாடாளுமன்ற உறுப்பினர்தான் பிரதமராக வருவார் என்பது இனியும் உறுதியில்லை என டான் ஶ்ரீ முஹிடின் யாசின் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!