Latestமலேசியா

கூலிமில் வீட்டின் இரும்புக் கதவின் நடுவே சிக்கிக்கொண்ட குழந்தையை தீயணைப்பு படை வீரர்கள் மீட்டனர்

கூலிம்,ஏப் 27 – கூலிமில் வீட்டிலுள்ள இரும்புக் கதவின் இடையிலுள்ள இரும்புத் துண்டில் தலை சிக்கிக்கொண்டதால் வலியால் சுமார் ஒரு மணிநேரம் துடித்துக் கதறிய ஆண் குழந்தையை தீயணைப்பு மற்றும் மீட்புப்படை வீரர்கள் மீட்டனர். இந்த சம்பவம் Sungai Karangan னிலுள்ள வீட்டில் நேற்று மாலை மணி 4,30 அளவில் நிகழ்ந்தது. Padang Meha வில் தாம் வேலையில் இருந்தபோது இச்சம்பவம் குறித்து தமது மனைவி தகவல் தெரிவித்தாக அந்த குழந்தையின் தந்தையான 32 வயதுடைய Azwan Mohd Nor தெரிவித்தார்.

தனது மகன் நன்றாக நடக்கக்கூடியவன் என்பதோடு எப்பபோதும் இரும்புக் கதவுக்கு அருகே நின்று கொண்டிருப்பான் என்பதால் அவனது தலை எப்படி அதில் சிக்கிக் கொண்டது என்று தெரியவில்லையென அவர் கூறினார். எனினும் சம்வம் நிகழ்ந்த இடத்திற்கு வந்து தீயணைப்பு , மீட்புப் படை வீரர்கள் கதவின் இரும்பு துண்டை சிறப்பு கருவியின் மூலம் விரிவுபடுத்தி குழந்தையை மீட்டனர். இச்சம்பவத்தில் அந்த குழந்தை எந்தவொரு காயமும் அடையவில்லையென கூலிம் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தலைவர் Hamizul Azuan Hamdan தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!