Latestமலேசியா

கெடாவில், விஷம் கலந்த ‘கெரொப்போவை’ உட்கொண்டதால் 3 வயது சிறுவன் மரணம் ; விவசாயியை 6 நாட்கள் தடுத்து வைக்க நீதிமன்றம் அனுமதி

பாலிங், ஜூலை 11 – கெடாவில், குரங்கு பொறியாக வைக்கப்பட்டிருந்த எலி பாசனம் கலந்த கெரொப்போவை உட்கொண்ட மூன்று வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்காக, விவசாயி ஒருவர் ஆறு நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

விஷத்தை கவனக்குறைவாக கையாண்டது, சிறுவர்களை அலட்சியம் செய்தது ஆகிய குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைக்காக அவரை தடுத்து வைக்க கூலிம் செஷன்ஸ் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

முன்னதாக, கெடா, செர்டாங்கில், நேற்று அவ்வாடவர் கைதுச் செய்யப்பட்டதை, கூலிம் போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டன் முஹமட் அஜிசுல் கைரி (Mohamad Azizul Khairi) உறுதிப்படுத்தினார்.

குற்றவியல் சட்டத்தின் கீழ் அவருக்கு எதிராக விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

இந்நிலையில், காட்டுப் பகுதியில், 1.2 மீட்டர் உயரத்தில், மிக இறுக்கமாக கட்டப்பட்டிருந்த அந்த கெரொப்போ உணவை சிறுவர்கள் எட்ட முடியாது.

அதனால், வேறு ஒருவரால் அது எடுத்து சிறுவர்களிடம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் அல்லது குரங்குகளால் அது கீழே தள்ளிவிடப்பட்டிருக்க வேண்டுமென, கைதுச் செய்யப்பட ஆடவரின் சகோதரரான 35 வயது அம் என மட்டும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட நபர் ஒருவர் கூறியுள்ளார்.

சிறுவர்கள் உட்கொண்ட
கெரொப்போவில், சீனாவில் தயாரிக்கப்பட்ட எலி பாசனம் கலக்கப்பட்டிருந்தது. அது நாட்டில் பதிவுச் செய்யப்படாத விஷம் என்பதையும் அம் ஒப்புக் கொண்டுள்ளார்.

எனினும், தம்மை போல, அந்த விஷத்தை சுற்று வட்டார விவசாயிகளும் பயன்படுத்துவது வழக்கமான ஒன்றென, அவர் கூறியுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!