
கெடா, ஜூலை 16 – கெடா குடிநுழைவுத் துறை, Ops Kutip, Ops Sapu மற்றும் Ops Gegar நடவடிக்கைகளின் கீழ், குவாலா மூடா மற்றும் கோத்தா ஸ்டார் மாவட்டங்களில் இரண்டு நாட்கள் நடத்திய சோதனையில், ஆவணங்களின்றி தங்கியிருந்த 29 வெளிநாட்டினரை கைது செய்துள்ளது.
நான்கு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 124 பேர் பரிசோதிக்கப்பட்டதில் 43 பேர் வெளிநாட்டினர். கைது செய்யப்பட்ட 29 பேரில் 19 ஆண்களும் 10 பெண்களும் இடம்பெற்றுள்ளனர்.
அவர்கள் 10 வியட்நாமியர்கள், 8 வங்காளதேசத்தவர்கள், 6 தாய்லாந்தினர், 4 மியான்மர் நாட்டவர்கள் மற்றும் ஒரு லாவோஸ் நாட்டுப் பெண் ஆவர். இவர்கள் அனைவரும் டிநுழைவுச் சட்டத்தை மீறியதாக சந்தேகிக்கப்படுகின்றனர்.
சுங்கை பட்டாணியிலுள்ள இரவுச் சந்தையில் நடத்தப்பட்ட சோதனையின்போது, சில முதலாளிகள் வெளிநாட்டுத் தொழிலாளர்களை தப்பிச் செல்லுமாறு எச்சரித்தனர். இருப்பினும், அதிகாரிகளின் விரைவான நடவடிக்கையால் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் மேல் நடவடிக்கைக்காக பெலாந்திக் (Belantik) குடிநுழைவு தடுப்பு முகாமுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.



