
குவாந்தான், ஜூலை.16-பஹாங், Taman Bukit Rangin Perdanaவில் காயமடைந்த மலாயா Tapir ஒன்று பாதுகாப்பாக மீட்கப்பட்டது. சமூக ஊடகங்களில் வைரலான அந்தக் காணொளி குறித்து தகவல் கிடைத்ததும், பஹாங் வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காக்கள் துறை கண்காணிப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியது. இம்மாதம் 12 ஆம் தேதி பொறியொன்றை வைத்ததாகவும் மறுநாள் 245 கிலோகிராம் எடை கொண்ட சுமார் ஐந்து வயதுடைய ஆண் Tapir அப்பொறியில் மாட்டிக் கொண்டதாக பஹாங் வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காக்கள் துறையின் இயக்குநர் Yusoff Shariff தெரிவித்தார்.
அந்தப் பாதுகாக்கப்படும் வனவிலங்கு, பின்னர் உடல்நலப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைக்காக பேராக், Sungkaiயில் உள்ள வனவிலங்கு மீட்பு மையத்திற்கு அனுப்பப்பட்டது. அச்சம்பவத்தைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பகுதியில் இன்னும் பொறி வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
முன்னதாக, Threads பயனர் ஒருவர், ஓட்டத்தில் ஈடுபட்டிருந்த போது அந்த Tapir விலங்கைக் கண்டு, அதனைக் காணொளி எடுத்து பகிர்ந்திருந்தார். அது பற்றி உதவி கோரி பல தரப்புகளைத் தாம் தொடர்பு கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.



