
கோலாலம்பூர், மே-14-கெப்போங்கில் உணவகம் ஒன்றில் வன்செயல் தாக்குதலில் ஈடுபட்டது தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட மூன்று நண்பர்களுக்கு செஷன்ஸ் நீதிமன்றம் ஜாமின் வழங்க மறுத்ததைத் தொடர்ந்து அவர்கள் தொடர்ந்து தடுத்துவைக்கப்பட்டனர்.
49 வயது, 33 வயது மற்றும் 30 வயதுடைய அந்த மூன்று ஆடவர்களும் கடந்த வாரம் ஒருவரை தாக்கியதாக கொண்டுவரப்பட்ட குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினர்.
அம்மூவரும் ஜாலான் கெப்போங்கில் ஒரு பாக்கூதே உணவத்தில் 47 வயதுடைய ஆன்ரு தே என்பவரை அதிகாலை 2 மணியளவில் தாக்கி காயப்படுத்தியதாக குற்றவியல் சட்டத்தின் 326 ஆவது விதியின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டனர்.
அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள்வரை சிறை, அபராதம் மற்றும் பிரம்படியும் விதிக்கப்படும் சாத்தியமும் உள்ளது.
அந்த மூவருக்கும் எதிரான குற்றச்சாட்டு ஜூன் 15 ஆம் தேதி மீண்டும் மறுவாசிப்புக்கு செவிமடுக்கப்படும்.



