Latestமலேசியா

கேமரன் மலை கோவிலில் வாள் தாக்குதல்; ஒருவர் கைது

பெந்தோங், மே-12-கேமரன் மலையில் உள்ள ஒரு கோவிலில் வாளால் தாக்குதல் நடத்திய சம்பவத்தில் ஒருவரை போலீஸார் கைதுச் செய்துள்ளனர்.

இந்த சம்பவம் வழிபாடு நடைபெற்று கொண்டிருந்தபோது நடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் திடீரென கோவில் வளாகத்துக்குள் நுழைந்து கத்திக் கூச்சலிட்டு பிரச்சனை ஏற்படுத்தியுள்ளார்.

அவரை வெளியேறுமாறு கேட்டபோது, 39 வயதுடைய அந்நபர் ஆவேசமடைந்து, கோவிலில் இருந்த வாளை எடுத்துக் கொண்டு 31 வயது ஆடவரைத் தாக்கியதாக கூறப்படுகிறது.

தாக்குதலில் பாதிக்கப்பட்டவர் கைகள், நெற்றி மற்றும் உடலில் காயமடைந்துள்ளார்.

முதலில் அவர் தானா ராத்தாவில் உள்ள சுல்தானா ஹாஜா கல்சோம் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈப்போவில் உள்ள ஃபாத்திமா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

பொது மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் போலீசார் சந்தேக நபரை கைதுச் செய்தனர்.

அவருக்கு முன்பே போதைப்பொருள் தொடர்பான குற்றப் பதிவுகள் இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் விசாரணைக்காக 4 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!