Latestமலேசியா

கைப்பேசியால் வந்த வினை; மூவர் தாக்கியதில்14 வயது மாணவனின் தலையில் 40 தையல்கள்

ரவூப், ஜூலை-22, ஒரு கைப்பேசிக்காக 14 வயது மாணவனை சரமாரியாகத் தாக்கியதன் பேரில், பஹாங், ரவூப்பில் 3 மாணவர்கள் கைதாகியுள்ளனர்.

தனக்கு நன்கு அறிமுகமான மூவர் தாக்கியதில் தலையில் படுகாயமேற்பட்ட அம்மாணவனுக்கு 40 தையல்கள் போடப்பட்டன.

மூவரும் தாக்கியதில், தான் கால்வாயில் போய் விழுந்ததாகவும் பாதிக்கப்பட்ட மாணவன் போலீஸ் புகாரில் கூறியுள்ளான்.

இதையடுத்தே கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ரவூப் போலீஸ் தலைவர் ஷாரில் அப்துல் ரஹ்மான் (Shahril Abd Rahman) கூறினார்.

16 மற்றும் 17 வயதிலான அம்மூவரில் ஒருவருக்குச் சொந்தமான கைப்பேசியை, அடி வாங்கிய மாணவரின் தம்பி கடந்த வாரம் சேதப்படுத்தியுள்ளான்.

அதற்கு மாற்றாக இன்னொரு கைப்பேசியை இன்னும் வாங்கிக் கொடுக்கவில்லையெனக் கூறியே, பாதிக்கப்பட்ட மாணவனை மற்ற மூவரும் தாக்கியது போலீஸின் தொடக்கக் கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது.

கைதான மூவரும் 3 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

விசாரணைகளுக்கு உதவ சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகளின் உதவியை போலீஸ் நாடியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!