
கோத்தா பாரு, மே 12 – 19 வயதுடைய கல்லூரி மாணவியைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட கல்லூரி மாணவன், இன்று கோத்தா பாரு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளான்.
கடந்த ஏப்ரல் 30 முதல் மே 1 வரை, கெத்தெரே (Ketereh) பகுதியில் உள்ள ஜாலான் பெங்காலான் பியாவில் (Jalan Pengkalan Piah) இந்தச் சம்பவம் நடைப்பெற்றதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிபதியின் முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது, குற்றஞ்சாட்டப்பட்டவர் அதனை புரிந்துகொண்டதாக தலையசைத்தார். எனினும், இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தின் அதிகார வரம்புக்குட்பட்டதால், அவரிடமிருந்து எந்தக் குற்ற ஒப்புதலும் பதிவு செய்யப்படவில்லை.
இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது அதிகபட்சம் 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் பிரம்படி விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஜூலை 2-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.



