
கோத்தா பாரு, ஜூலை-10 – கிளந்தான், கோத்தா பாருவில் உள்ள தனியார் கல்லூரியின் அறிமுக வார நிகழ்வில் கோழிக் கறி சாப்பிட்ட புதிய மாணவர்கள் உட்பட 343 பேர் நச்சுணவுப் பாதிப்புக்கு ஆளாகினர்.
அவர்களில் 134 பேர் சிகிச்சைப் பெற வந்தபோது நச்சுணவுப் பாதிப்பு உறுதியானது.
எஞ்சியர்களுக்கு, உடனடி நோய் கண்டறிதலின் போது அப்பாதிப்பு கண்டறியப்பட்டது.
அவர்களிடம் வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, தலைசுற்றல், வாந்தி, மயக்கம், காய்ச்சல் ஆகிய அறிகுறிகள் காணப்பட்டன.
முதல் நாள் இரவு உணவின் போது, வெளியிலிருந்து தருவிக்கப்பட்ட கேட்டரிங் உணவுகளில் அந்தக் கோழிக் கழி பரிமாறப்பட்டுள்ளது.
அதில், குடல் பாதிப்பை ஏற்படுத்தும் salmonella பாக்டீரியா கிருமி இருந்திருக்கக்கூடுமன சந்தேகிக்கப்படுகிறது.
விசாரணைத் தொடருவதாக மாநில சுகாதாரத் துறை கூறியது