Latestமலேசியா

கோவிட் காலத்தில் உயர் சம்பள அடிப்படையில் Air Asia வேலை நீக்கம் செய்தது நியாயமில்லை; தொழில் நீதிமன்றம் அதிரடி

கோலாலம்பூர், மே-29, கோவிட் பெருந்தொற்று காலத்தில் உயர் சம்பளம் பெறுகிறார்கள் என்ற அடிப்படையில் விமானப் பொறியியலாளர்கள் இருவரை Air Asia வேலை நீக்கம் செய்தது, நியாயமற்ற செயல் என தொழில் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சம்பள அடிப்படையில் அவ்வாறு செய்திருக்கக் கூடாது என நீதிமன்றம் கூறியது.

என்னதான் நிதி நெருக்கடியில் சிக்கினாலும் தவறான அணுகுமுறையை Air Asia பயன்படுத்தியிருக்கக் கூடாது என நீதிபதி Anderson Ong சொன்னார்.

‘கடைசியாக வந்தவர்கள் முதலில் வெளியே’ என்ற கொள்கை, Faisal Sulaiman மற்றும் Izwan Nezar விஷயத்தில் கடைபிடிக்கப்படவில்லை என அவர் சுட்டிக் காட்டினார்.

எனவே, Air Asia-வுடன் 16 ஆண்டுகள் சேவையாற்றிய அவ்விருவருக்கும் மொத்தமாக 788,670 ரிங்கிட் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!