Latestமலேசியா

சபாவில் காணாமல் போன சிறுமி: பாலியல் பலாத்காரமாக இருக்கலாமென சந்தேகம்: வெளிநாட்டு இளைஞன் கைது

சபா, ஜூலை 30 – சபா தாவாவில் வீட்டைவிட்டு காணாமல் போன 18 வயதிற்குட்பட்ட சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக சந்தேகிக்கப்படும் 18 வயது வெளிநாட்டு இளைஞனை போலீசார் கைது செய்துள்ளனர்.

சிறுமியின் தந்தை அளித்த புகாரைத் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டதில், சிறுமி பண்டார் ஃபஜார் (Bandar Fajar) பகுதியில் மீட்கப்பட்டுள்ளார். ஆரம்ப விசாரணையில், அவர் சந்தேகநபருடன் வாடகை அறையில் தங்கியிருந்ததாகவும், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.

போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து விசாரணையில், அவன் செல்லுபடியாகும் பயண ஆவணங்களின்றி மலேசியாவில் தங்கியிருந்தது தெரியவந்துள்ளது.

இந்த வழக்கு, பாலியல் பலாத்காரம் மற்றும் சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த குற்றச்சாட்டுகளின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!