Latestமலேசியா

சாலையில் போய்க்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மட்கிப் போன மரக்கிளை விழுந்தது; நால்வர் காயம்

பஹாவ், மே-29, நெகிரி செம்பிலான், குவாலா பிலா அருகே Bukit Putus சாலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது, மட்கிப் போன மரக் கிளை விழுவதைக் காட்டும் காணொலி வைரலாகியுள்ளது.

சாலையோரம் வந்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது திடீரென மரக்கிளை விழுந்து, பின்னால் அமர்ந்திருந்த சிறுவன் சாலையில் குப்புற விழுவது நெஞ்சைப் பதற வைக்கிறது.

அதில் அச்சிறுவன் உட்பட நால்வரும் காயமடைந்ததாக தெரிகிறது.

மற்ற வாகனமோட்டிகள் உதவிக்கு வந்ததும் அக்காணொலியில் தெரிகிறது.

அச்சம்பவம் எப்போது நடந்தது என்பது குறித்து தகவல் இல்லை.

போலீஸ் தரப்பும் இன்னும் அறிக்கை எதனையும் வெளியிடவில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!