Latestமலேசியா

சிவில் திருமணத்தை மதச் சடங்குடன் ஒப்பிட முடியாது – JPN

கோலாலம்பூர், அக்டோபர் 19 – சிவில் திருமண நிகழ்வை மதச் சடங்குடன் ஒப்பிடக் கூடாது என மலேசிய தேசியப் பதிவுத் துறையான JPN தெளிவுபடுத்தியுள்ளது.

1976ஆம் ஆண்டு திருமணம் மற்றும் விவாகரத்து சட்டம் வழங்கிய அதிகாரத்தின் அடிப்படையில், திருமணப் பதிவாளர்கள் மற்றும் உதவிப் பதிவாளர்கள் சிவில் திருமணத்தை நடத்தி பதிவு செய்கின்றனர்; இது எந்த மதத் தலைவரின் பொறுப்பையும் ஏற்றுக்கொள்வதாக அல்ல எனத் துறை தெரிவித்தது.

உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுடின் நசூத்தியோன் இஸ்மாயில் (Saifuddin Nasution Ismail) முஸ்லிம் அல்லாத தம்பதியரின் சிவில் திருமண நிகழ்வை நடத்தும் பழைய காணொளி மீண்டும் பரவியதைத் தொடர்ந்து இந்த விளக்கம் வெளியிடப்பட்டது. அந்தக் காணொளி 2023ஆம் ஆண்டு தேசியப் பதிவுத் துறையின் வைர விழா நிகழ்ச்சியின் ஒரு பகுதியாகும் என்றும், இது குறித்து 2025 அக்டோபர் 25ஆம் தேதியே அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது என்றும் JPN குறிப்பிட்டது.

மேலும், நாட்டின் சட்டங்களை மதித்து, சிவில் திருமண நடைமுறையையும் மதச் சடங்குகளையும் குழப்பமடையச் செய்யும் தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்றும், மதம், கலாச்சாரம் மற்றும் மரபுகளை மதித்தபடியே சட்டத்தின்படி சிவில் திருமணங்கள் தொடர்ந்து நடத்தப்படும் என்றும் JPN வலியுறுத்தியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!