Latestஉலகம்

சீனாவில், இரவு மணி 9.30-க்கு மேல் பள்ளி பாடம் செய்ய தடையா? ; வலுக்கும் விவாதம்

பெய்ஜிங், ஏப்ரல் 23 – சீனா, குவாங்சி மாநிலத்திலுள்ள, Nanning Guiya எனும் ஆரம்பப் பள்ளி, இரவு மணி 9.30-க்கு மேல், மாணவர்கள் வீட்டுப் பாடத்தை செய்ய ‘தடை’ விதித்துள்ளதோடு, பணிகளை முடிக்காத மாணவர்களை தண்டிக்க வேண்டாம் எனவும் முடிவு செய்துள்ளது, சமூக ஊடகங்களில் சூடான விவாதத்தைத் தூண்டியுள்ளது.

மாணவர்கள் ஓய்வெடுக்க வேண்டிய நேரம் அது. அந்நேரத்தில், மாணவர்களைப் படிக்க விடாமல் செய்வதன் மூலம் அவர்களின் மீதான அழுத்தத்தைக் குறைக்க முடியும் என்பதால், அப்பள்ளி அந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

மார்ச் 27-ஆம் தேதி, அது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை, தனது WeChat சமூக ஊடகம் வாயிலாக அப்பள்ளி நிர்வாகம் வெளியிட்டிருந்தது.

எனினும், அந்த அறிவிப்பு ஆன்லைனில் வைரலாக பகிரப்பட்டு, கடும் விவாதத்தை தூண்டியது.

சிலர் அந்த அறிவிப்பை வரவேற்றுள்ள வேளை ; பலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக, கல்வியில் பின் தங்கி இருக்கும் மாணவர்களுக்கு அது சற்றும் பொருந்தாது எனும், அளவுக்கு அதிகமான வீட்டு பாடம் இருக்கும் பட்சத்தில், அதனை இரவு மணி 9.30-க்குள் செய்து முடிக்க இயலாது எனவும், அதிக போட்டிதன்மையுடன் கூடிய நடப்பு சூழலுக்கு அது கொஞ்சமும் ஒத்து வராது எனவும் பலர் தொடர்ந்து அடுக்கடுக்காக அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

சீனாவில், போட்டித்தன்மை வாய்ந்த கல்வி முறையில், தங்கள் பிள்ளைகள் மிளிர வேண்டும் எனும் நினைக்கும் பெற்றோர்கள், அவர்களுக்கு கூடுதல் அழுத்தத்தை கொடுக்கின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!