Latestமலேசியா

சீன இளம்பெண் மற்றும் இந்திய ஆடவனின் உதவியினால் மனம் நெகிழ்ந்த மலாய் ஆடவர்

தெலுக் இந்தான், பிப் 25 – பேரா , தெலுக் இந்தான் , சங்காட் ஜெரிங்கிலிருந்து ‘Ban Pecah’-வுக்கு சென்று கொண்டிருந்தபோது பெட்ரோல் முடிந்ததால் தத்தளித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிளோட்டியான மலாய் ஆடவர் ஒருவருக்கு சீன இளம் பெண் மற்றும் இந்திய ஆடவர் ஒருவரும் உதவியது குறித்து அவர் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ஆறு கிலோமீட்டர் தூரத்தில் சிம்பாங் எம்பட் செமோங்கிலில் தான் பெட்ரோல் நிலையம் அமைந்துள்ளது.

வேறு வழியில்லாத நிலையில் தனது மோட்டார் சைக்கிளை நகர்த்திச் சென்று கொண்டிருந்தபோது பல மோட்டர் சைக்கிளோட்டிகள் தம்மை கடந்து சென்றபோதிலும் அவர்களில் எவரும் உதவிக்காக நிற்கவில்லையென நூருல் ரிட்ஜுவான் ஜகாரியா டின் தெரிவித்தார். அப்போது எதிரேயுள்ள சாலையில் மோட்டார் சைக்கிளில் ஒரு சீன இளம்பெண்ணும் அவனது சகோதரன் என நம்பபப்டும் ஒரு சிறுவனும் வந்ததை தான் பார்த்ததாக அவர் கூறினார். அவர்கள் எனக்கு உதவுவார்கள் என நான் எதிர்பார்க்கவில்லை. எனக்கு ஆச்சரியம் ஏற்படுத்தும் வகையில் அவர்கள் உடனடியாக திரும்பிவந்து என் அருகே நின்றனர் என தனது முகநூலில் அவர் பதிவிட்டுள்ளார்.

அந்த இளம் பெண் தனக்கு பெட்ரோல் வாங்கி வருவதற்கு முன்வந்தார். அந்த பெண்ணுக்குத் தொல்லை கொடுக்க வேண்டாம் என்பதால் நான் முதலில் மறுத்தேன். எனினும் தம்மை அங்கேயே காத்திருக்கும்படி கூறிவிட்டு பெட்ரோல் வாங்கிவருவதாக கூறி அவர் அங்கிருந்து சென்றார். இரண்டு நிமிடங்கள் கழித்து எதிர்திசையிலிருந்து வந்த இந்திய ஆட்வர் ஒருவரும் எனக்கு உதவ முன்வந்தார். அவரும் திரும்பிவந்து தமது மோட்டார் சைக்கிளை நிறுத்தி அவரது மோட்டார்சைக்கிள் மூலம் தள்ளிச் செல்வதற்கு முன்வந்தார். அந்த உதவியை நான் ஏற்றுக் கொண்டேன்.

சிறிது தூரம் நாங்கள் சென்றுகொண்டிருந்தபோது பெட்ரோல் நிலையத்திலிருந்து ஒரு கலத்தில் பெரோல் வாங்கிக்கொண்டு அந்த சீனப் பெண்ணும் அந்த சிறுவனும் அங்கு வந்து சேர்ந்தனர். தாம் பெட்ரோல் ஊற்றி மோட்டார் சைக்கிள் ஸ்டார்ட் செய்து அங்கிருந்து புறப்படும்வரை அப்பெண் அங்கு நின்றுகொண்டிருந்தார். அப்பெண்ணுக்கு பெட்ரோலுக்காக பணம் கொடுத்துவிட்டு அவருக்கும் அந்த சிறுவனுக்கும் மனதார நன்றி தெரிவித்தேன். மலேசியாவில் இதர இனங்களை சேர்ந்தவர்களாக இருந்தாலும் தக்க நேரத்தில் தனக்கு உதவி செய்வதற்காக அந்த சீனப் பெண்ணும் மற்றும் இந்திய ஆடவரும் நடந்துகொண்ட விதமும் அவர்கள் காட்டிய இன ரீதியிலான ஒன்றுமையும் தம்மை நெகிழச் செய்ததாக நூருல் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!