சுங்கை பட்டாணி, மே-29, கெடா, சுங்கை பட்டாணியில் 4 வீடுகளில் ஏற்பட்ட தீயின் போது, கரும்புகையை சுவாசித்ததில் 6 வளர்ப்புப் பூனைகள் பரிதாபமாக மடிந்திருக்கின்றன.
அச்சம்பவம் நேற்று மாலை Taman Seri Kota Kuala Muda, Jalan Pantai Mereka-வில் நிகழ்ந்தது.
அப்பூனைகளுக்கு முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டும், அவற்றைக் காப்பாற்ற முடியாமல் போய் விட்டதாக தீயணைப்பு மீட்புத் துறை கூறியது.
அத்தீயில் அந்நான்கு வீடுகளும் 10 முதல் 85 விழுக்காடு வரை தீயில் சேதமடைந்தன.
தீ மற்ற வீடுகளுக்குப் பரவாத வகையில் மாலை 6.30 மணிக்கெல்லாம் முழுவதுமாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
தீக்கான காரணமும் சேத மதிப்பும் விசாரிக்கப்படுகிறது.