Latestமலேசியா

சுங்கை பட்டாணி கையுறைத் தொழிற்சாலையில் இராசயணம் கொட்டியது; ஒருவர் மயங்கி விழுந்தார்

சுங்கை பட்டாணி, ஜூன்-28, கெடா, சுங்கை பட்டாணி Bakar Arang-கில் உள்ள தொழிற்சாலையொன்றில் 60 லிட்டர் அளவுக்கு இராசயணம் கொட்டியதால் அங்கிருந்தவர்கள் பதறிப் போயினர்.

நேற்று மாலை 4.30 மணிக்கு நிகழ்ந்த அச்சம்பவத்தில் ஒருவர் மயங்கி விழுந்தார்; மேலும் 16 பேர் கண் எரிச்சல் மற்றும் தலைசுற்றலுக்கு ஆளாகினர்.

அவர்கள் முறையே அந்த கையுறைத் தொழிற்சாலையில் பணிபுரியும் 15 பெண்கள், 2 ஆண்கள் ஆவர்.

மயங்கி விழுந்தவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட வேளை, மற்றவர்கள் அருகிலுள்ள கிளினிக்குகளுக்கு அனுப்பப்பட்டதாக தீயணைப்புத் துறை கூறியது.

sodium hypochlorite வகை இராசயணம் தரையில் கொட்டியதுமே தண்ணீர் ஊற்றப்பட்டு அதன் வீரியம் குறைக்கப்பட்டது.

பின்னர் BBP Kulim Hi -Tech-கைக் சேர்ந்த அபாயகரமான இராசயணப் பொருள் நிபுணர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!