Latestஉலகம்

சூரியரின் வெடிப்பு ஏற்படும் அபாயம் ; உலகம் முழுவதும் பண்பலைகள் பாதிக்கப்படலாம் – நாசா எச்சரிக்கை

வாஷிங்டன், ஜூலை 24 – சூரியனில் உள்ள கருமையான பிளாஸ்மாவில், இவ்வாரம் வெடிப்பு ஏற்படலாம் என அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா கூறியுள்ளது.

அந்த வெடிப்பால், உலகம் முழுவதும் உள்ள ரேடியோ பண்பலைகள் உட்பட விமானம் மற்றும் செயற்கைக்கோள் தகவல் தொடர்பு அமைப்புகள் சேதமடைய 60 விழுக்காடு வரை வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

சூரியனில் வெடிப்பு என்பது இயல்பான நிகழ்வுதான் என்றாலும், அது அன்றாடம் ஏற்படுவதில்லை.

சூரியனில் வெடிப்பு ஏற்படும் போது, அதிலிருந்து வெளியாகும் துகல்கள், விண்வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் செயற்கைகோள்கள் மற்றும் மின்னணு கருவிகளில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

அதுவே, உலகம் முழுவதும் இயங்கும் பண்பலைகள் மற்றும் தொலைத் தொடர்பு சேவைகளில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது.

குறிப்பாக, அடுத்த 24 மணி நேரத்தில், மிதமான அல்லது சக்தி வாய்ந்த சூரிய வெடிப்பு ஏற்படக்கூடும் எனவும், அதனால், உலகம் முழுவதும் மின் தடங்கள்கள் ஏற்படலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!