Serdang Sultan Idris Shah மருத்துவமனையில் புதிதாக இருந்த சிகிச்சை மையத்தில் உள்ள அறுவை சிகிச்சை அறைகள் மின்சார விவகாரங்கள் மற்றும் அதிகமான ஈரப் பதத்தினால் இன்னும் பயன்படுத்த முடியாமல் இருப்பதை சிலாங்கூர் சுகாதார இயக்குனர் டாக்டர் Ummi Kalthom Shamsuddin உறுதிப்படுத்தினார். எனவே இப்போதைக்கு இருதய அறுவை சிகிச்சைகள் மருத்துவமனையின் பிரதான பிரிவில் மேற்கொள்ளப்படும் வேளையில், சில நோயாளிகள் கோலாலம்பூரில் உள்ள தேசிய இருதய சிகிச்சை மையமான IJN மற்றும் இதர தனியார் மருத்துவமனைகளுக்கு சிக்சைக்காக அனுப்பிவைக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
சுகாதார அமைச்சு இருதய நோயாளிகளை அறுவை சிகிச்சைக்காக தனியார் சுகாதார நிலையங்களை தற்காலிகமாக Outsourced ஏற்பாடு செய்துள்ளது. இந்த முயற்சி திட்டமிடுதலின் இறுதி கட்டத்தில் உள்ளது மற்றும் எதிர்காலத்தில் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் கூறினார். ஆனால் Serdang மருத்துவமனையின் பொது வார்டுகள், இதய மையத்தில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவு உள்ளிட்டவை முழுமையாக செயல்படுவதாக டாக்டர் Ummi Kalthom தெரிவித்தார். இந்த வளாகம் செயல்படத் தொடங்கும் முன், பொதுப்பணித் துறையின் கண்காணிப்பின் கீழ் முக்கிய ஒப்பந்தக்காரரால் மேலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று டாக்டர் Ummi Kalthom தெரிவித்தார்.