கோலாலம்பூர், ஜூன்-18, கடந்த வாரம் சிலாங்கூர், செலாயாங்கில் மளிகைக் கடையொன்றில் வைத்து பெண்ணொருவரின் பிட்டத்தைத் தொட்டு வைரலான ஆடவன், இன்று கோலாலம்பூர் மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டான்.
எனினும், e-hailing ஓட்டுநரான 38 வயது இர்வான் லேசா ( Irwan Lesa ) அக்குற்றச்சாட்டை மறுத்தான்.
ஜூன் 4-ங்காம் தேதி பிற்பகல் 2 மணி வாக்கில் வலுக்கட்டாயமாக 38 வயது பெண்ணிடம் அந்த ஆபாச சேட்டையைப் புரிந்ததாக அவன் குற்றம் சாட்டப்பட்டான்.
அதிகபட்சம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது பிரம்படிகள் அல்லது மேற்கண்ட மூன்றில் இரண்டு தண்டனைகளை வழங்க வகைச் செய்யும் குற்றவியல் சட்டத்தின் 354-வது பிரிவின் கீழ் அவன் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளான்.
மனைவி நிறைமாத கர்ப்பிணி என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அவ்வாடவனுக்கு ஐயாயிரம் ரிங்கிட் மற்றும் ஒரு நபர் உத்தரவாதத்தின் பேரில் ஜாமீன் கொடுக்கப்பட்டது.
வரும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வழக்கு மறுசெவிமெடுப்புக்கு வரும்.