Latestமலேசியா

இந்தியத் தொழில்முனைவோருக்காக KUSKOP முன்னெடுக்கும் RM220 மில்லியன் ஒதுக்கீட்டில் MUDRA திட்டங்கள்; பயன்படுத்திக் கொள்ள அழைப்பு

தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுஅமைச்சான KUSKOP, இந்தியத் தொழிமுனைவோர் மூலதனம் மற்றும் பொருளாதார ஊக்கத் தொகையான MUTRA முன்னெடுப்பின் கீழ் பல்வேறு நிதி மற்றும் கடனுதவித் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.

அதற்காக ​இவ்வாண்டு, 220 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அவற்றில், TEKUN NASIONAL வழியாக ​SPUMI திட்டத்தின் கீழ் இந்திய சமூகத்தைச் சேர்ந்த சிறு தொழில்முனைவோருக்காக 120 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இது மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் கடனுதவி வழங்குகிறது.

Amanah Ikhtiar Malaysia-வின் கீழ் ​PENN திட்டத்தின் மூலம் இந்தியப் பெண் தொழில்முனைவோரை வலுப்படுத்த 27 மில்லியன் ரிங்கிட் பிரத்யேகமாக ஒதுக்கப்பட்டுள்ளது.

SME Bank வங்கி வாயிலாக ‘வணிகம்’ கடனுதவித் திட்டத்தில், வணிகத் திறனை விரிவாக்க சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.

Bank Rakyat வாயிலாக, BRIEF-i கடனுதவித் திட்டடத்தில் 15 மில்லியன் ரிங்கிட்டும், இந்தியக் கூட்டுறவுச் சங்கங்களை முன்னேற்ற மலேசியக் கூட்டுறவு ஆணையத்தின் வாயிலாக 11 மில்லியன் ரிங்கிட்டும் ஒதுக்கப்பட்டுள்ளன.

அரசாங்கத்தின் இந்த உதவிகள் ஒவ்வொரு மலேசியரையும் சென்றடைவது முக்கியம் என அமைச்சர் ஸ்டீவன் சிம்மும் வலியுறுத்தியுள்ளார்.

அவ்வகையில், இவ்வுதவிகளுக்கான விண்ணப்ப நடைமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளன.

விண்ணப்பத்தாரர்கள் TEKUN, SME Bank, Bank Rakyat, AIM, SKM ஆகிய நிறுவனங்களுக்கு நேரில் சென்று ஆலோசனைகளைப் பெறுவதோடு விண்ணப்பப் படிவங்களைச் சமர்ப்பிக்கலாம்.

அல்லது அவற்றின் அதிகாரப்பூர்வ இணையத் தளங்களுக்குச் சென்று விண்ணப்பப் படிவங்களைப் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

அதே சமயம், அடையாள அட்டை நகல், செல்லுபடியாகும் SSM வணிகப் பதிவு அல்லது ஊராட்சியிடமிருந்து பெறப்பட்ட உரிமம், வங்கி கணக்கறிக்கை மற்றும் சுருக்கமாக வணிகத் திட்டம் அல்லது Invoice போன்ற அடிப்படை ஆவணங்களைத் தயாராக வைத்திருக்க வேண்டும்.

ஆனால் எக்கராணம் கொண்டும் இடைத்தரகர்கள் எனக் கூறிக் கொண்டு வருவோரிடம் ஏமாற வேண்டாம் என நினைவுறுத்தப்பட்டுள்ளது.

​மேல் விபரங்களுக்கும் விண்ணப்பங்களுக்கும் www.kuskop.gov.my என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை நாடுங்கள்.

இந்த நல்​வாய்ப்பைப் பயன்படுத்தி உங்கள் வணிகத்தை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்லுங்கள்!

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!