
ஜித்ரா, ஜூலை 7 – கடந்த சனிக்கிழமை முதல் அறுவர் கொண்ட குடும்பம் ஒன்று காணாமல் போய் தேடப்பட்டு வந்த நிலையில், இன்று, ஜித்ரா சுங்கை கோரோக் ஆற்றில் மூழ்கிய காரிலிர்ந்து அவர்கள் ஆறு பேரின் உடல்களும் மீட்கப்பட்டன.
இறந்தவர்களில் தாய் தந்தை மற்றும் 4 பிள்ளைகளும் அடங்குவர்.
கடந்த வெள்ளிக்கிழமை, தாமான் அமானிலுள்ள தன்னுடைய வீட்டில் தங்கி விட்டு , வீடு திரும்பிய தனது அண்ணன் மற்றும் அவரது குடும்பத்தினரிடமிருந்து எவ்வித தகவல்களும் கிடைக்கப்பெறாததால், பாதிக்கப்பட்ட நபரின் தங்கை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனிடையே தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த கெடா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் (JBPM) ஆற்றின் அடிப்பகுதியிலிருந்து வாகனம் மற்றும் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டெடுத்துள்ளனர்.
இந்தத் துயரச் சம்பவத்தில் 32 வயது நிரம்பிய முகமது அசிம் எசாத் இஷாக் , 31 வயது மதிக்கத்தக்க அவரது மனைவி நூருல் ஹிதாயா கலீஜா ரஸ்மான் எஃபெண்டி மற்றும் ஆறு மாதங்கள் முதல் ஒன்பது வயது வரையிலான அவர்களது நான்கு குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மேல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.