Latestமலேசியா

ஜே.பி.ஜே அதிகாரிக்கு கையூட்டு வழங்க முன்வந்த இருவர் தடுத்து வைப்பு

சிரம்பான் , ஜன 31 – JPJ எனப்படும் சாலை போக்குவரத்துத் துறையின் அமலாக்க அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முன்வந்தது மற்றும் 500 ரிங்கிட் லஞ்சம் கொடுத்ததாக நம்பப்படும் இரண்டு சந்தேகப் பேர்வழிகளை ஏழு நாட்களுக்கு தடுத்து வைக்கும் உத்தரவை எம்.ஏ.சி.சி. பெற்றுள்ளது. எம்.ஏ.சி.சி. சார்பில் ஆஜரான பிராசிகியூசன் அதிகாரி ஜைனப் யாஹ்யா செய்து கொண்ட மனுவைத் தொடர்ந்து அந்த இரண்டு சந்தேகப் பேர்வழிகளையும் தடுத்து வைக்கும் உத்தரவில் மாஜிஸ்திரேட் ஃபைரூஸ் சியுஹாத் கையெழுத்திட்டார்.

ஐஸ் தொழிற்சாலையின் மேலாளர் மற்றும அவரது ஏஜெண்ட் ஆகிய இருவரும் விசாரணைக்கு உதவும் பொருட்டு பிப்ரவரி 6ஆம் தேதிவரை எம்.ஏ.சி.சி லோக்காப்பில் தடுத்து வைக்கப்பட்டிருப்பார்கள். 40 மற்றும் 20 வயதுடைய அந்த இருவரும் நேற்று போட்டிக்சனிலுள்ள எம்.ஏ.சி.சி தலைமையகத்திற்கு விசாரணைக்கு வந்தபோது கைது செய்யப்பட்டனர். 2009 ஆம் ஆண்டு எம்.ஏ.சி.சி சட்டத்தின் 17 ஆவது விதி உட்பிரிவு B-யின் கீழ் அவர்களுக்கு எதிரான விசாரணை நடைபெற்று வருகிறது

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!