Latestமலேசியா

ஜோகூரில் கொலைக் குற்றம் நாட்டப்பட்ட ஆடவருக்கு 30 ஆண்டு சிறை, 12 பிரம்படி

புத்ரா ஜெயா, ஏப் 24 – 9 ஆண்டுகளுக்கு முன்  கொலைக் செய்த குற்றத்திற்காக B . Ramesh என்ற ஆடவருக்கு  விதிக்கப்பட்ட மரண தண்டனையை  கூட்டரசு நீதிமன்றம்   இன்று  30 ஆண்டு சிறைத்தண்டனை மற்று  12 பிரம்படிகளாயக திருத்தம் செய்துள்ளது.  ரமேஷ் கைது செய்யப்பட்ட   2016ஆம் ஆண்டு    ஜூன் 12ஆம் தேதி முதல்  அவருக்கான   30ஆண்டுகள் சிறைத் தண்டனை அமலுக்கு வருவதாக மூவர் கொண்ட  கூட்டரசு நீதிமன்ற நீதிபதிகள் குழுவுக்கு தலைமையேற்ற   தேசிய தலைமை நீதிபதி  Tengku Maimun Tuan Mat தமது தீர்ப்பில் தெரிவித்தார்.  மேல் முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் Abang Hashim   மற்றும் கூட்டரசு நீதிமன்ற நீதிபதி Hasnah Mohammed Hashim   ஆகியோர்   அரசு தரப்பு வழக்குறிஞர்  Asmah   Musa சமர்ப்பித்த மனுவை பரிசீலித்த இதர நீதிபதிகளாவர்.   

கடந்த  2015ஆம் ஆண்டு    மார்ச் 9ஆம் தேதி  மாலை  4 மணிக்கும்  மறுநாள் காலை  10 மணிக்குமிடையே  Mohd  Harris Saravanan Abdullaவை கொலை செய்ததில்   குற்றவாளி என  நிருப்பிக்கப்பட்டதை தொடர்ந்து   கடந்த   2018ஆம் ஆண்டு   அம்டோபர் மாதம்  29ஆம் தேதி 48 வயதுடைய ரமேஷ்ஷிற்கு  ஜோகூர் உயர்நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.  இன்னும்  தலைமறைவாக இருந்துவரும்  நால்வருடன்  சேர்ந்து    Kulaijaya, Kampung  Melayu Seelong  Selatan னில் ரமேஷ் இந்த கொலையை செய்ததாக கூறப்பட்டது.  இதற்கு முன் ரமேஷின்  மேல்முறையீட்டை   கடந்த 2022 ஆம் ஆண்டு   மேல் முறையீடு நீதிமன்றம் நிராகரித்து மரண தண்டனையை நிலைநிறுத்தியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!