Latestமலேசியா

ஜோகூர் தேர்தல்; 56 வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்த பக்காத்தான் ஹராப்பான்; 4 இந்தியர்கள் களம் இறக்கம்

தங்காக், ஜூன்-23-ஜோகூர் மாநிலத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி அனைத்து 56 தொகுதிகளுக்கான முழு வேட்பாளர் பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

தங்காக், ​புக்கிட் கம்பீர் திடலில் நடைபெற்ற பிரம்மாண்ட கூட்டத்தில், கூட்டணியின் தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்த வேட்பாளர் பட்டியலை அறிமுகப்படுத்தினார்.

_’முன்னோக்கிச் செல்லும் ஜோகூர்_’ என்ற சுலோகத்துடன் ஜோகூர் ஆட்சியை மீண்டும் கைப்பற்றும் நோக்கில், அனுபவம் வாய்ந்த தலைவர்கள் மற்றும் இளம் தொழில்முறை வல்லுநர்கள் உள்ளடக்கிய கலவையாக இந்த அணி உருவாக்கப்பட்டுள்ளது.

அவர்களில் முன்னாள் அமைச்சர் Dr மஸ்லி மாலிக் (Maszlee Malik) முக்கியமானவராவார்.

​அதோடு, இம்முறை கூட்டணியில் அனைத்து சமூகப் பிரதிநிதித்துவத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், 4 இந்திய வேட்பாளர்களும் இம்முறை களமிறங்குகின்றனர்.

​புக்கிட் கெப்போங்கில் (Bukit Kepong) மணி, லாயாங்-லாயாங்கில் (Layang-Layang) குணா பாலகிருஷ்ணன், பாலோ (Paloh) சட்டமன்றத்தில் Dr ரூபன் ஆறுமுகம், ​மற்றும் ஸ்கூடாய் தொகுதியில் கார்த்தியாயினி ஜெயபாலன் ஆகியோரே அந்நால்வராவர்.

வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட போதிலும், பக்காத்தான் மந்திரி பெசார் வேட்பாளராக யாரும் பெயர் குறிப்பிடப்படவில்லை.

​வரும் சனிக்கிழமை, ஜூன் 27 -ஆம் தேதி வேட்புமனுத் தாக்கலும், ஜூலை 11-ஆம் தேதி வாக்குப்பதிவும் நடைபெறவுள்ள நிலையில், ஜோகூர் தேர்தல் களம் களைக்கட்டத் தொடங்கியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!